நவீன தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் தீர்வுகளுடன் உங்கள் வாழ்க்கையை எளிமையாக்குவதில் தமிழன் எனர்ஜி சிஸ்டம்ஸ் முன்னணி வகிக்கிறது.
2018 முதல் 'தமிழன் எலக்ட்ரானிக் சர்வீஸ் பிரொவைடர்' என்ற பெயரில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் துறையில் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த முறையில் சேவைகளை வழங்கி வெற்றிகரமாக இயங்கி வந்தது. வாடிக்கையாளர்களிடம் எங்களுக்குக் கிடைத்த நம்பிக்கையும் வரவேற்பும் தான் எங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது.
இதன் தொடர்ச்சியாக, எங்களது நீண்ட கால அனுபவத்தையும் தொழில்நுட்ப அறிவையும் கொண்டு, உலகத் தரம் வாய்ந்த சொந்த தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் 'தமிழன் எனர்ஜி சிஸ்டம்ஸ்' (Thamizhan Energy Systems) ஆகும். தற்போது IoT (இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்) மற்றும் ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தில் அதிநவீன வாட்டர் லெவல் கண்ட்ரோலர் (Water Level Controller) சாதனங்களை வெற்றிகரமாகத் தயாரித்து வழங்கி வருகிறோம்.
உயர்தரமான எலக்ட்ரானிக் சாதனங்களை மிகச் சரியான மற்றும் நியாயமான விலையில் அனைத்து தர மக்களுக்கும் விநியோகிப்பது. புதிய மற்றும் மேம்பட்ட டெக்னாலஜிகள் மூலம் மனிதர்களின் அன்றாடப் பணிகளை எளிதாக்கி, உலகை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதே எங்களது பிரதான நோக்கமாகும்.
இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட் ஆட்டோமேஷன் மற்றும் ஐஓடி (IoT) தயாரிப்பு நிறுவனமாக உருவெடுப்பதுடன், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான அதிநவீன மின்சாதனத் தீர்வுகளைத் தொடர்ச்சியாக வழங்குவது.
"தொழில்நுட்பம் எளிமையானதாகவும், அனைவரையும் சென்றடையும் வகையிலும் இருக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் எங்கள் தயாரிப்புகள் உருவாக்கப்படுகின்றன."